சணப்பிரட்டி- பணம் வைத்து சூதாடிய இருவர் கைது. ரூ 200 பறிமுதல்.
சணப்பிரட்டி- பணம் வைத்து சூதாடிய இருவர் கைது. ரூ 200 பறிமுதல்.;
சணப்பிரட்டி- பணம் வைத்து சூதாடிய இருவர் கைது. ரூ 200 பறிமுதல். கரூர் மாவட்டம் , பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சணப்பிரெட்டி அருகே பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் உதயகுமாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மே ம 30ம் தேதி மதியம் ஒரு மணி அளவில் , சணப்பிரட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட தொழில்பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் , சணப்பிரெட்டி பகுதியைச் சேர்ந்த சிவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து , அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும் , ரூ.200 பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.