ரோட்டரி கிளப் அருப்புக்கோட்டை 2025 - 26 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

ரோட்டரி கிளப் அருப்புக்கோட்டை 2025 - 26 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா;

Update: 2025-07-27 15:18 GMT
அருப்புக்கோட்டை டெலிபோன் ரோட்டில் உள்ள வர்த்தக சங்க மண்டபத்தில் ரோட்டரி கிளப் அருப்புக்கோட்டை 2025 - 26 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி கிளப் விருதுநகர் மாவட்ட ஆளுநர் தினேஷ் பாபு முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தலைவராக ரவி கணேஷ் மற்றும் செயலாளராக செல்வம் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தினருக்கு தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.‌ மேலும் ஏழை கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி கட்டணம் வழங்கப்பட்டதுடன், சென்ற ஆண்டு பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது. மேலும் அரசு பள்ளிகளுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் அருப்புக்கோட்டை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News