பரம்பரை பரம்பரையாக திமுகவிற்கு வாக்களித்ததாகவும் தங்களுக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உதவவில்லை 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவை புறக்கணிப்போம்

பரம்பரை பரம்பரையாக திமுகவிற்கு வாக்களித்ததாகவும் தங்களுக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உதவவில்லை 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவை புறக்கணிப்போம் என தண்டியனேந்தல் கிராம மக்கள் வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்*;

Update: 2025-03-10 13:08 GMT
பரம்பரை பரம்பரையாக திமுகவிற்கு வாக்களித்ததாகவும் தங்களுக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உதவவில்லை 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவை புறக்கணிப்போம் என தண்டியனேந்தல் கிராம மக்கள் வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற யின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இவரது தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி தாலுகா தோணுகால் கிராமத்தில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதாகவும் இவர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் கிராமத்தில் குவாரி அமைக்க கடந்த 10 ஆண்டுகளாக சிலர் முயற்சி செய்து வருவதாகவும் கிராம மக்கள் பல சட்ட போராட்டங்கள் நடத்தி இந்த குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது அந்த கிராமத்தில் மதுரையைச் சார்ந்த திருமாவளவன் என்பவர் குவாரி அமைக்க உரிமம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது இவர் குவாரி அமைப்பதற்காக அந்த பகுதியில் பூமி பூஜை நடத்தி உள்ளார் இதை அடுத்து கனிம வள சுரங்கம் அமைக்க மாவட்ட நிர்வாகம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் தங்கள் பகுதியில் குவாரி அமைக்க கூடாது எனக்கூறி குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி கடந்த மாதம் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மனு அளித்துள்ளனர் மனு அளித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் தற்போது வரை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை கண்டித்து தண்டியனேந்தல் கிராம மக்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் இந்த பகுதியில் குவாரி அமையக்கூடாது எனக் கூறி மனு அளித்து ஒரு மாத காலம் ஆகியும் தற்போது வரை அமைச்சர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இதற்காக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசி விற்க்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், தண்டியனேந்தல் கிராமத்தில் வசிக்கும் அனைவரும் பரம்பரை பரம்பரையாக திமுகவைச் சார்ந்தவர்கள் தான் தங்களுக்கு வாக்குரிமை பெற்ற நாளிலிருந்து திமுகவிற்கு தான் வாக்களித்து வருவதாகவும் அமைச்சராகிய தங்கம் தென்னரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத காரணத்தினால் அதிருப்தியில் இருப்பதாகவும், இந்த பகுதிகள் சுமார் 1600 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில் இந்த குவாரியை தடுத்த நிறுத்தினால் மட்டுமே திமுக விற்கு வாக்களிப்போம் இல்லை என்றால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் பொழுது அமைச்சர் தங்கம் தென்னரசுவை நாங்கள் புறக்கணிப்போம் எனவும் மனு அளித்து ஒரு மாத காலம் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தங்கள் பகுதி குறைகள் குறித்து சமூக வலைதளங்களில் அதற்கு திமுக கட்சியினர் கிராம மக்களை தவறாக சித்தரிப்பதாகவும் நிதித்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்டால் அவருடைய கட்சிக்காரர்கள் பதில் அளிப்பதாகவும் தங்கள் பகுதியை தொடர்ந்து நிதித்துறை அமைச்சர் புறக்கணித்து வருவதாகவும் இதுபோன்று தொடர்ந்து புறக்கணித்தால் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தங்கள் பகுதி மக்கள் உங்களை புறக்கணிப்பார்கள் எனவும் ஜாதியை காரணம் காட்டி அமைச்சர் தங்களை புறக்கணிக்கிறார்களா என கேள்வி எழுப்பினார் தொடர்ந்து அமைச்சர் தங்களை புறக்கணித்தால் திருச்சுழி தொகுதி முழுவதிலும் உள்ள முத்திரையர் சமுதாய மக்கள் ஒன்றிணைந்து உங்களை புறக்கணிப்போம் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். முத்தரையர் சமுதாயம் என காரணம் காட்டி தங்களை புறக்கணித்தால் இனிமேல் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டோம் எனவும் இது குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்தால் அமைச்சர் ஏன் உங்களை பார்க்க வர வேண்டும் என கட்சியினர் பதில் அளிப்பதாகவும் மன வேதனை உடன் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்

Similar News