நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் 2026- சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்கு எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் வருகின்ற சட்டமன்றத் தேர்தல் 2026-யை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையம் அமைப்பது குறித்து முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-12-10 13:13 GMT

நாமக்கல் மாவட்டத்தில் 92-இராசிபுரம், 93-சேந்தமங்கலம், 94-நாமக்கல், 95-பரமத்திவேலூர், 96-திருச்செங்கோடு, 97-குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,629 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட  ஆட்சியர்  வருகின்ற சட்டமன்றத் தேர்தல் 2026-யை முன்னிட்டு, அரசு சட்டக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட  ஆட்சியர் வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள், முகவர்கள் வாக்கு எண்ணும் பணியினை பார்வையிடுவதற்கான வசதிகள், அவர்கள் வந்து செல்வதற்கான பாதைகள், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான மேசைகள், நாற்காலிகள், வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேவையான குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் ஊடகப்பிரிவினர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தி சேகரிக்க ஏதுவாக ஊடக மையம் அமைத்தல், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவதற்கான இட வசதி அகியவை ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வுகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.விமலா  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மா.க.சரவணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முருகன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி. சு.சுந்தரராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  மு.கிருஷ்ணவேணி, வருவாய் கோட்டாட்சியர்கள்   வே.சாந்தி (நாமக்கல்), திரு.பி.எஸ்.லெனின் (திருச்செங்கோடு), மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கே.ஏ.சுரேஷ்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) செல்வராஜ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Similar News