பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி 21 லட்சம் ரூபாய் மோசடி

கேரளா வாலிபர்கள் 2 பேர் கைது;

Update: 2025-03-16 03:31 GMT
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 28 வயதுடைய வாலிபர் ஒருவரிடம் ஆன்லைனில் பகுதிநேர வேலைவாங்கி தருவதாக ரூ.21 லட்சத்து 29 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபரிடம் ஆன்லைனில் பகுதிநேர வேலைவாங்கி தருவதாக கூறி மோசடி செய்தது கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த அப்துல் வாகீத் (23), முகமது ஷெரீப் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News