ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கிய முன்னாள் மாணவர்கள்: 22 ஆண்டுகளுக்குப் பின் நெகிழ்ச்சி
பொன்னேரி அருகே 22 ஆண்டுகளுக்கு முன்னர் அரசுப் பள்ளியில் பயின்ற பள்ளி மாணவர்கள் இணைந்து பள்ளிக்கு வண்ணம் தீட்டியும் ஓய்வு பெற்ற தங்களின் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மாணவர் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றனர்
பொன்னேரி அருகே 22 ஆண்டுகளுக்கு முன்னர் அரசுப் பள்ளியில் பயின்ற பள்ளி மாணவர்கள் இணைந்து பள்ளிக்கு வண்ணம் தீட்டியும் ஓய்வு பெற்ற தங்களின் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மாணவர் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றனர். திருவள்ளூர் மாவட்டம் மெதூர் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டு படி பயின்ற பள்ளி மாணவ மாணவிகள் பள்ளியில் அவர்கள் 22 ஆண்டுகளுக்கு முன்னர் தாங்கள் பயின்ற பள்ளியின் கட்டிடத்திற்கு வண்ணம் பூசியும் ஜன்னல் மின்விளக்கு வசதி உள்ளிட்டவற்றை அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தும் தங்களின் ஆசிரியர்களாக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்ற ஆசிரியர்களை அழைத்து வந்து அதனை ரிப்பன் வெட்டி கைத்தட்டி ஆரவாரத்துடன் திறந்து வைத்து அவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி 22 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நெகிழ்ச்சியுடன் பங்கேற்று தங்களது முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.