அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 22 கிலோ குட்கா பொருட்கள் விற்பனை செய்த நபர்கள் கைது
பெரம்பலூர் மாவட்டத்தில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மாவட்ட எஸ்பி எச்சரிக்கை;
பெரம்பலூர் மாவட்டம் கவுள் பாளையம் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 22 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு நபர்களை கைது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் தனிப்படையினர் நடத்திய சோதனையில் பெரம்பலூர் உட்கோட்டம் பெரம்பலூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கவுள் பாளையம் கிராமத்தில் 1.ஜெயபால் (70) த/பெ தங்கவேல், ஆதனூர் அஞ்சல்,ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம். என்பவர் தனக்கு சொந்தமான கீர்த்தி மளிகை கடையில், கவுள் பாளையம். மற்றும் 2) முத்துச்சாமி(57/25)த/பெ. பிச்சை பிள்ளை, பெருமாள் கோவில் தெரு, கவுல் பாளையம், என்பவர் தனக்கு சொந்தமான முகேஷ் மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் *தனிப்படையின் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினர் மேற்படி இரண்டு எதிரிகளை கைது செய்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெரம்பலூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் ராஜா மேற்படி இரண்டு எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்து 1.ஜெயபால் (70) த/பெ தங்கவேல், என்பவரிடமிருந்து 1.ஹான்ஸ் (10.200-கி.கி), 2.கூல்லீப் (579கி) 3.விமல் பாக்கு (921-கி) மற்றும் 4. V1-பான் மசாலா (1.200-கிலோ) மொத்தம் – 12.900 கிலோ , மற்றும் 2) முத்துச்சாமி(57/25)த/பெ. பிச்சை பிள்ளை, என்பவரிடமிருந்து 1.ஹான்ஸ் (9.200-கி.கி) 2.V1-பான் மசாலா (810-கிராம்) மொத்தம் – 10.110 கிலோ , ஆகிய குட்கா பொருட்களை பறிமுதல் செய்து இரண்டு எதிரிகளையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.