மத்திய அரசால் வழங்கப்படும் 22 மது பாட்டில்களை வீட்டில் வைத்திருந்த குற்றத்திற்காக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசால் வழங்கப்படும் 22 மது பாட்டில்களை வீட்டில் வைத்திருந்த குற்றத்திற்காக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2025-03-01 07:40 GMT
மத்திய அரசால் வழங்கப்படும் 22 மது பாட்டில்களை வீட்டில் வைத்திருந்த குற்றத்திற்காக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ஆழ்வார் வயது 52 இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் சட்ட விரோதமாக மத்திய அரசால் ராணுவ வீரர்களுக்கு வழங்கக்கூடிய மது பாட்டில்கள் ஏராளமாக உள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அவரது வீட்டில் ஆய்வு செய்தபோது 22 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தனது உறவினர் ராணுவத்தில் உள்ளதாகவும் தனக்கு மது அருந்துவதற்காக கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.அரசு பேருந்து ஓட்டுநர் மது பாட்டில்களை விற்பனை செய்ய வைத்திருந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்கள் வைத்திருந்த குற்றத்திற்காக ஆழ்வாரை சஸ்பெண்ட் செய்து அரசு போக்குவரத்து கழகம் மண்டல மேலாளர் உத்தரவிட்டுள்ளார். ஸ்டாலின் ஆட்சியில் அரசு ஊழியர்களே மது விற்பனையில் ஈடுபடும் சம்பவம் பொது மக்களிடையே அதிருப்த்தியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News