நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் 22.11.2025 மற்றும் 23.11.2025 ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது- மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தகவல்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் -2026 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று வருகின்றனர்.;

Update: 2025-11-20 13:28 GMT

மேற்படி சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடம் இருந்து பெறுவதற்கு நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் 22.11.2025 சனிக்கிழமை மற்றும் 23.11.2025 ஞாயிற்றுகிழமை ஆகிய நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேற்படி முகாமில் அனைத்து வாக்காளர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சிரமமின்றி படிவங்களை பூர்த்தி செய்து வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்க வசதியாக, தன்னார்வலர்களும் பணித்தள பொறுப்பாளர்களும் மற்றும் பஞ்சாயத்து செயலாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஒவ்வொரு வாக்குச்வாடியிலும் தொடர்புடைய 2002 ஆண்டு வாக்காளர் பட்டியல்களும் வைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தங்கள் பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் உள்ள விபரங்களை கணக்கெடுப்பு படிவத்தில் பூர்த்தி செய்ய அனைத்து உதவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே அனைத்து வாக்காளர்களும் தங்களது கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைத்து வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.முன்னதாக, மாவட்ட  ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.


Similar News