விதிமுறைகளை மீறிய 225 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
By : King 24X7 News (B)
Update: 2024-01-17 13:47 GMT
கோப்பு படம்
போக்குவரத்து விதிகள் மீறுபவர்கள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாகன சோதனை நடத்தினர்.
இதில் அதிவேகமாக வாகனம் ஓட்டியது, அதிக பாரம் ஏற்றி வந்தது. சாலை விபத்துக்கள் மூலம் உயிர் இழப்புக்கள் ஏற்படுத்தியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகள் மீறி வாகனம் ஓட்டிய 225 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.