கரூர்- புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் 23 ஆம் ஆண்டு நினைவு தினம் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கட்சியினர்.
கரூர்- புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் 23 ஆம் ஆண்டு நினைவு தினம் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கட்சியினர்.;
கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் நிறுவப்பட்டுள்ள காமராஜர் சிலை முன்பு புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர்.டாக்டர் பூவை மூர்த்தி அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் செல்லமுத்து தலைமையில் மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் அருகே வீரணம்பட்டி சேகர்,குளித்தலை வழக்கறிஞர் அறிவுமதி,கரூர் நகர செயலாளர் இளங்கோ,நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் பெரியசாமி கலந்து கொண்டு மறைந்த தலைவருக்கு மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தினர்.மேலும் கோஷங்களை எழுப்பி புகழ் வணக்கம் செலுத்தினர்.