மலைக்கிராமமான மக்களுக்கான முகாம்: ரூ.1.99கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

மலைக்கிராமமான மக்களுக்கான முகாமில் 236 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 99 லட்ச மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

Update: 2023-12-13 12:52 GMT

மனுகளை பெற்ற ஆட்சியர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலைக்கிராம்மான கேர்மாளம் ஊராட்சி நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 236 பயனாளிகளுக்கு 1 கோடியே 99 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் கன்கரா வழங்கினார்.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் குறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் சென்று முறையிட வெகுதூரம் செல்ல வேண்டி இருப்பதாலும், தங்கள் பகுதியிலே அனைத்து அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்து அவர்களின் குறைகளை தீர்த்து வைக்கும் வகையில் மனுநீதி நாள் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை தீர்ப்பது தான் மனுநீதிநாளின் முக்கிய நோக்கமாக உள்ளது.

இந்தமுகாமில் மேலாண்மைத்துறையின் சார்பில் 176 பயனாளிகளுக்கு ரூ.1,90,08,000 இணையவழிபட்டா ஆணையினையும், 6 பயனாளிகளுக்கு ரூ.6,48,000 மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்களும், 36 பயனாளிகளுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ்களையும் 13 என மொத்தம் 236 பயனாளிகளுக்கு 1 கோடியே 99 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்டஉதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.

Tags:    

Similar News