விஜயபாஸ்கர் மீதான வழக்கு அக்டோபர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அரசு செய்திகள்

Update: 2024-09-26 04:02 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை அதிமுக ஆட்சியின் போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது மனைவியை ரம்யா ஆகியோர் மீது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு முதல்மை நீதிபதி சுபத்ராதேவி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கர் அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜராகவில்லை அவர்களுக்கு பதிலாக வக்கீல்கள் ஆஜராகி வாதாடினர். இதை அடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News