பட்டணம் ஆனந்தா கல்வி நிறுவனத்தின் சார்பில், 24வது மழலையர் பட்டமளிப்பு விழா வெகு விமர்சியாக நடந்தது..

பட்டணம் ஆனந்தா கல்வி நிறுவனத்தின் சார்பில், 24வது மழலையர் பட்டமளிப்பு விழா வெகு விமர்சியாக நடந்தது..;

Update: 2025-04-06 13:33 GMT
பட்டணம் ஆனந்தா  கல்வி நிறுவனத்தின் சார்பில், 24வது மழலையர் பட்டமளிப்பு விழா வெகு விமர்சியாக நடந்தது..
  • whatsapp icon
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர். பட்டணம் ஆனந்தா கல்வி நிறுவனத்தின் சார்பில், 24வது மழலையர் பட்டமளிப்பு விழா மற்றும் அகாடமி சாதனை நிகழ்ச்சி பட்டணம் ரங்கசாமி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக இன்ஜினியர் என். மாணிக்கம், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் எம்.ஏ.உதயகுமார், பட்டணம் டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் பொன். நல்லதம்பி கலந்து கொண்டு மழலையர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர். இதனைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த கலை நிகழ்ச்சியல் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ஆனந்தா கல்வி நிறுவனத்தின் நிறுவனர் என்.சக்திவேல் நடேசன், செயலாளர் திருமதி ஏ.கஸ்தூரி சக்திவேல், இங்கிலாந்து ஆஸ்டன் பல்கலைகழகத்தின் தொழிமுனைவோர் ஆலோசகர் எஸ்.கே.ஆதித்யா சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினர். பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் இவ்விழாவில், மேச்சேரி மீனம்பார்க் பள்ளியின் செயலாளர் திருமதி டாக்டர் எஸ். திவ்யபாலா, பள்ளி முதல்வர்கள் என்.ரமேஷ்குமார், ஏ.அருண், பொறுப்பாசியர்கள், ஆசிரிய, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பெற்றோர்கள் விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவில் 1000 திற்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப் பட்டது.. மேலும் ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் சிறப்பாக இது போன்ற விழாக்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News