பிறவி மருதீஸ்வரர் கோவில் கொடியேற்றம்
திருத்துறைப்பூண்டியில் உள்ள பழமையான பிறவி வருத்தீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.;
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில் ஆலய சித்திரை தேரோட்ட தேரோட்ட திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்வு வெகு சிறப்பாக நேற்று நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி உலக புகழ் பெற்ற அஸ்வினி நட்சத்திரத்தின் பரிகார ஸ்தலமாக விளங்கும் பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் ஆலய சித்திரை தேரோட்டம் திருவிழா மே மாதம் 07 தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான கொடியேற்ற விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது ஆலய செயல் அலுவலர் முருகையன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்டகபடிதாரர் வி கே சசிகலா குடும்பத்தினர் வி கே திவாகரன் கலந்து கொண்டு கொடியேற்று நிகழ்வு தாரதப்பட்டைகள் முழங்க மேளதாளங்களுடன் சிவாய நமக என முளக்கங்கள் இட்டு ஆலயம் எதிரியை உள்ள கொடிமரத்தில் புனித கொடியேற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் ஆலய தேரோட்ட திருவிழாவிற்கான கொடி ஏற்றுதல் நிகழ்வில் வெகு சிறப்பாக நடைபெற்றது.