"ஒரு ரூபாய் செலவு இல்லாமல் அரசுப் பணிகள்"
"ஒரு ரூபாய் செலவு இல்லாமல் அரசுப் பணிகள் வழங்கப்பட்டுள்ளது" - அமைச்சர் ஐ.பெரியசாமி;
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராம மக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் வேலைவாய்ப்பு வேண்டியும், நலத்திட்டப் பணிகள் வேண்டி ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்த வண்ணம் இருந்தனர். இந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி அரசு பணிகளான அங்கன்வாடி, கூட்டுறவு பணிகள், மற்றும் சத்துணவு, செவிலியர், மருந்தாளுநர் உட்பட பல்வேறு பணிகளுக்காக ஆத்தூர் தொகுதியை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வந்துள்ளது. தகுதி உள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு இல்லம் தேடி வரும். குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் ஆத்தூர் தொகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கானோருக்கு ஒரு ரூபாய் செலவில்லாமல் அரசுப் பணிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.