அரியலூரில் ஜூன் 24-இல் திருநங்கை, திரும்பி, இடைபாலினத்தவர்களுக்கான சிறப்பு முகாம்
அரியலூரில் ஜூன் 24-இல் திருநங்கை, திரும்பி, இடைபாலினத்தவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது..;
அரியலூர்,ஜூன் 3- அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஜூன் 24 ஆம் தேதி அனைத்து திருநங்கை, திருநம்பி , இடைபாலினத்தவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில், அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே திருநங்கை, திருநம்பி , இடைபாலினத்தவர்கள் அனைவரும் விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.