ஜெயங்கொண்டம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலரின் உடல் 24 குண்டுகள் முழங்க அடக்கம்
ஜெயங்கொண்டம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலரின் உடல் 24 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது*;
அரியலூர், ஆக.7- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (32) இவர் மீன்சுருட்டி தலைமை காவலராக வேலை பார்த்து வந்தார் இந்நிலையில் நேற்று சதீஷ் இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டம் நோக்கி சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்: இச்சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்நிலையில் கவரப்பாளையத்தில் உள்ள சதீஷின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பா. சாஸ்திரி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் இதனையடுத்து அவரது உடலுக்கு காவல்துறை சார்பில் மரியாதை செலுத்தும் வகையில் 24 குண்டுகள் முழங்க சதீஸ் உஞல் நல்லடக்கம் செய்யப்பட்டது