சிறுமி கொலைக்கு ரூ.25 நிவாரணம் வழங்க கோரி சி.பி.எம்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

குமரமங்கலத்தில் சிறுமி கொலைக்கு ரூ.25 நிவாரணம் வழங்க கோரி சி.பி.எம்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

Update: 2024-08-23 14:46 GMT
தமிழ்நாடு அரசு நிவாரணத் தொகையை 25 லட்சமாக வழங்க வேண்டும் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை நடத்தி கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும். என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தி குமரமங்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நடைபெற்றது. திருச்செங்கோடு அருகே சத்தியநாயக்கன் பாளையம் என்ற ஊரில் கட்டிட தொழிலாளி பிரபு (35) மேகலா (30) இவர்களது மூத்த மகள் தஸ்மிதா (11) இரண்டாவது மகள் வர்ஷிதா (3) என உள்ளனர். இதே பகுதியில் வசித்து வரும் சாப்ட்வேர் இன்ஜினியர் செந்தில்குமார் வீடு உள்ளது. 27.7.2024 அன்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் செந்தில்குமார் (45) என்பவரது வீட்டின் முன்பு பிரபுவின் உறவினர்கள் குடியிருந்து வருவதால் ஐந்து பேர் சென்று விளையாடிக் கொண்டிருந்தனர் அப்பொழுது செந்தில்குமார் குழந்தைகளை வீட்டில் அடைத்து பூட்டி வைத்துள்ளார். இதில் ஒரு சிறுவன் கதவை திறந்து 4 பேருடன் தப்பித்து ஓடி விட்டனர். அப்போது செந்தில்குமார் என்பவர் தஸ்மிதா என்ற சிறுமியை கத்தியால் கழுத்தில் வெட்டி உள்ளார்.மயக்கம் அடைந்து கீழே விழுந்த நிலையில் சத்தம் கேட்டு முத்துவேல் தங்கராசு மற்றும் உறவினர்கள் சென்றபோது வீட்டுக்குள் வந்தால் குழந்தையை கொன்று விடுவேன் என்று கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டினார். குழைந்தையை காப்பாற்ற வந்த முத்துவேல். தங்கராஜ் ஆகியோரையும் துரத்தி சென்று வெட்டி உள்ளார். காவல்துறையினர் அச்சிறுமியை மீட்டு சேலம் தனியார் காவேரி மருத்துவமனையில் உள் சிகிச்சை நோயாளியாக சேர்த்துள்ளனர். பின்னர் அச்சிறுமி கவலைக்கிடமாக இருந்த நிலையில் தஸ்மிதா சிறுமி 22.08.2024 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஐந்து குழந்தைகளை அடைத்து கொலை செய்ய முயற்சித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது .இதற்கு துணையாக இருந்த அவரது அம்மா சம்பூர்ணம் மீதும் சம்பவ நேரத்தில் இருந்த உறவினர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கொடூரமான செயலுக்கு நீதி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு செலவில் சிகிச்சைக்கான முழு செலவு தொகை உட்பட 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கபட்ட குடும்பத்திற்கு காவல்துறை உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும். என வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் பி.சுரேஷ். தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துகண்ணன்.மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி. ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ். மாவட்ட செயற்குழு உறுப்பினர். எஸ். தமிழ்மணி.. மாவட்ட குழு உறுப்பினர் கே.பழனியம்மாள். ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ்.வெங்கடாசலம். வீ.தேவராஜன். ஒன்றிய குழு உறுப்பினர்கள் . பி.மாரிமுத்து. ஈஸ்வரன்.ரமேஷ். சக்திவேல். பூபதிமுருகன். மூத்த தோழர் சுந்தரம் மற்றும் கிளைச் செயலாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News