ராமநாதபுரம் 25 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக மண்டபம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.75 லட்சம் மதிப்பிலான 25 கிலோ சாரஸ்(Charas) போதை பொருள் பறிமுதல்: க்யூ பிரிவு போலீசார் நடவடிக்கை;
ராமநாதபுரம் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு நாட்டுபடகில் கடத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த குஞ்சார்வலசை கடற்கரை அருகே உள்ள வேலவன் குடியிருப்பு பகுதியில் கஞ்சா செடியின் பிசிலிருந்து தயாரிக்கப்படும் சராஸ் (Charas) கஞ்சா போதை பொருள் பதுக்கி வைத்திருப்பதாக ராமநாதபுரம் கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகி அவர்களுக்கு கிடைத்த தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் க்யூ பிரிவு போலீசார் நேற்று இரவு வேலவன் குடியிருப்பு பகுதியில் நடத்திய சோதனையில் 25 கிலோ எடை கொண்ட சராஸ் கஞ்சா போதை பொருளுடன் கிடாத்திருக்கை பகுதியைச் சேர்ந்த நம்பு மற்றும் சூடவலைக்குச்சி பகுதியைச் சேர்ந்த பாண்டி ஆகிய இருவரையும் பிடித்து ராமநாதபுரம் கியூ பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 25 கிலோ எடை கொண்ட சராஸ் போதைப்பொருளின் மதிப்பு ரூ.75 லட்சம் இருக்கலாம் என க்யூ பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.