செப்டிக் டேங்க் கழிவு நீரை பொது இடங்கள் மற்றும் நீர் நிலைகளில் கொட்டினால் ரூ 25ஆயிரம் அபராதம் வாகனம் பறிமுதல் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

செப்டிக் டேங்க் கழிவு நீரை பொது இடங்கள் மற்றும் நீர் நிலைகளில் கொட்டினால் ரூ 25ஆயிரம் அபராதம் வாகனம் பறிமுதல் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2025-03-21 16:13 GMT
அரியலூர் மார்ச்.22- ஜெயங்கொண்டம் நகராட்சிக்குள் தனியார் கழிவு நீர் வாகனங்கள் செப்டிக் டேங்க் கழிவு நீரை பொது இடங்கள் மற்றும் நீர் நிலைகளில் கொட்ட கூடாது, மீறி கொட்டினால் அபராதமாக ரூ 25ஆயிரம் விதிப்பதுடன் வாகனம் பறிமுதல் செய்யப்படும் இவ்வாறு நகராட்சி ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார் சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் அறிவுரையின் படி மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சி நகரமன்ற தீர்மானத்தின் அடிப்படையில் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் அரசு விதிமுறை களுக்கு உட்பட்டு கழிவு கசடு சுத்திகரிப்பு நிலையம்( FSTP) ஜெயங்கொண்டம் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே ஜெயங்கொண்டம் நகராட்சி பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்கள் வீடுகளில் இருந்து மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து கழிவுநீர் முறையாக நகராட்சியில் அனுமதி பெற்ற வாகனங்கள் மூலம் மட்டுமே கழிவு நீரை அகற்ற வேண்டும் ,பெறப்படும் கழிவு நீரை நகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முறையாக ஒப்படைக்க வேண்டும் , பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து கழிவு நீரை அகற்றுவதற்கு -14420 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் அல்லது ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,, தனியார் கழிவு நீர் வாகன உரிமையாளர்கள் செப்டிக் டேங்க் கழிவு நீரை பொது இடங்கள் மற்றும் நீர் நிலைகளில் கொட்ட கூடாது, மீறி கொட்டினால் அபராதமாக ரூ 25ஆயிரம் விதிப்பதுடன் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என கழிவுநீர் வாகன உரிமையாளர்களுக்கும், ஓட்டுனர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஆணையர் அசோக் குமார் அறிவுறுத்தி உள்ளார்.

Similar News