ரயில் நிலையத்தில் 2.5 கிலோ உலர் கஞ்சா பறிமுதல்

திருச்சி வந்த ஹவுரா விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த கஞ்சா பொட்டலங்கள்- ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணை;

Update: 2025-03-26 01:09 GMT
ரயில் நிலையத்தில் 2.5 கிலோ உலர் கஞ்சா பறிமுதல்
  • whatsapp icon
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நேற்று ரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஹவுராவிலிருந்து திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தபோது முன்பதிவு செய்யப்படாத பெட்டியின் ஒரு ஓரத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இரண்டு பிளாஸ்டிக் பைகள் இருந்தது. அந்த பைகளுக்கு யாரும் உரிமை கோரவில்லை. அதனை போலீசார் எடுத்து பிரித்து பார்த்தபோது அதில் ரூ.50,000/- மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. அந்த கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கடத்தி வந்தது யார்?, எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தி வரப்பட்ட கஞ்சாவின் மொத்த எடை 2.5 கிலோ ஆகும்.

Similar News