கிருஷ்ணகிரியில் கோடைகால பயிற்சி முகாம்-25-ல் தொடக்கம்.
கிருஷ்ணகிரியில் கோடைகால பயிற்சி முகாம்-25-ல் தொடக்கம்.;
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் வரும் ஏப்ரல் 25 முதல் மே 15 வரை கோடைகால இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் தடகளம், கைப்பந்து, குத்துச்சண்டை, உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். முகாமில் கலந்து கொள்பவர்கள் நாளை வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் மாவட்ட விளையாட்டு அரங்கில் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். திறமையாளர்கள் தேர்வு செய்யப்படுவர்; சான்றிதழும் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.