கும்மையாம்பட்டியில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது. ரூபாய் 250 பறிமுதல்.
கும்மையாம்பட்டியில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது. ரூபாய் 250 பறிமுதல்.;
கும்மையாம்பட்டியில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது. ரூபாய் 250 பறிமுதல். கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொரணி அருகே பணம் வைத்து சூதாடுவதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல்கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மே 25ஆம் தேதி மாலை 3 மணி அளவில் பொரணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள கும்மையாம்பட்டி பகுதியில் ஸ்ரீரங்கன் என்பவரது தோட்டத்தில் பணம் வைத்த சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட ஜெகதாபி அருகே கும்மையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி, முருகேசன், ,நாகராஜ் , ஸ்ரீரங்கன் , சரவணன் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து , அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும் , ரூபாய் 250தையும் பறிமுதல் செய்தனர் . மேலும் ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பிறகு அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.