கரூர் -தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ 26 கோடியே 14 லட்சத்து 18 ஆயிரத்து 560 மதிப்பில் 1533-வழக்குகளுக்கு தீர்வு.
கரூர் -தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ 26 கோடியே 14 லட்சத்து 18 ஆயிரத்து 560 மதிப்பில் 1533-வழக்குகளுக்கு தீர்வு.;
கரூர் -தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ 26 கோடியே 14 லட்சத்து 18 ஆயிரத்து 560 மதிப்பில் 1533-வழக்குகளுக்கு தீர்வு. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலில் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்டது. இதில் கரூரில் 5- அமர்வுகளும், குளித்தலையில் 2- அமர்வுகளும், அரவக்குறிச்சியில் -1 அமர்வும் கிருஷ்ணராயபுரத்தில் 1- அமர்வு என மொத்தம் 9- அமர்வுகள் நடைபெற்றது. இந்த அமர்வுகளில் 1685 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு ரூ26,14,18,560- மதிப்பில் 1533 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்நிகழ்வினை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மாவட்ட நீதிபதி இளவழகன், அவர்கள் துவக்கி வைத்தார். இதில் அனைத்து நீதிபதிகள்,கரூர் பார் அசோசியஷன் செயலாளர், அட்வகேட் அசோசியேசன்செயலாளர்,வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் அனுராதா செய்திருந்தார்.