மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 270 மனுக்கள் பெறப்பட்டுள்ளது
பல்வேறு கோரிக்கை மனுக்கள்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை காந்தி மஹாலில் வேப்பந்தட்டை மற்றும் அன்னமங்கலம் ஊரட்சியைச் சேர்ந்த கிராமமக்களுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை தொடர்பாக கேட்டறிந்து, மனுக்கள் பெற்றும் தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி மனு மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள். பின்னர், மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் அனைத்துத்துறைகளின் வாயிலாக அமைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் தொடர்பான அரங்குகளை அனைவரும் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினர். இம்முகாமில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 270 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வேப்பந்தட்டை ஒன்றியக் குழுத்தலைவர் ராமலிங்கம், வேப்பந்தட்டை வட்டாட்சியர் மாயகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் தனலட்சுமி கலியமூர்த்தி (வேப்பந்தட்டை), மருதாம்பாள் செல்வகுமார் (அன்னமங்கலம்) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.