முன்னாள் அமைச்சரின் 28-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி.*

முன்னாள் அமைச்சரின் 28-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி.*;

Update: 2025-07-31 15:48 GMT
காரியாபட்டி அருகே முன்னாள் அமைச்சரின் 28-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும், தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் தந்தையும் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சருமான அமரர்.வே.தங்கப்பாண்டியன் அவர்களின் 28 - ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி, தளபதி, தங்கப்பாண்டியன், சீனிவாசன், காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்கள். மேலும் திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பாக ஆயிரம் பேருக்கு மரக்கன்றுகளை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வழங்கினார்கள்.

Similar News