தர்மபுரியில் 28.28 லட்சத்திற்கும் மஞ்சள் ஏலம்

தர்மபுரி அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 28.28 லட்சத்திற்கு மஞ்சள் நிறம்;

Update: 2025-04-24 02:05 GMT
தர்மபுரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. மஞ்சள் விலை மின்னணு தேசிய வேளாண் சந்தையை குறிப்பிட்டு நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 76 விவசாயிகள் மொத்தம் 375 மூட்டைகளில் 214 குவிண்டால் மஞ்சள் கொண்டு வந்தனர். மேலும் ஏலத்தில் பனங்காலி மஞ்சள் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.25,909 ரூபாய்க்கும், விரலி மஞ்சள் 15,099 ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள் 13,789 ரூபாய்க்கு ஏலம் போனது. ஓகேவா மேலும் நேற்று ஒரே நாளில் 28.28 லட்சத்திற்கு ஏலம் போனது வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை தர்மபுரி ஒழுங்கு முறை விற்பனை கூட செயலாளர் ரவி, கண்காணிப்பாளர் முரளிதரன் மற்றும் வேளாண் அதிகாரிகள் செய்திருந்தனர்.

Similar News