கோயிலுக்கு சொந்தமான 29 ஏக்கர் நிலம் மீட்பு!

அரசு செய்திகள்;

Update: 2025-04-18 04:05 GMT
பொன்னமராவதி தாலுகா திருக்களம் பூரில் உள்ள திருவளரொளீஸ்வரர் கோயில் மற்றும் வெள்ளையப்ப சுவாமி மடம் கோயிலுக்கு சொந்தமான 29.7 ஏக்கர் நிலங்கள் தனிநபர் ஆக்ரமிப்பில் இருந் தன. இதைத்தொடர்ந்து இந்துசமய அறநிலையத்துறை தஞ்சாவூர் இணை ஆணையர் ஜோதிலட்சுமி ஆலோசனை யின்படி புதுக்கோட்டை உதவி ஆணை பர் சுரேஷ் தலைமையில், தனி தாசில்தார் (கோயில் நிலங்கள் மீட்பு) வனிதா, செயல் அலுவலர் ஜெயா மற்றும் நில அளவையர்கள், திருக்கோயில் பணியா ளர்கள் சுமார் ரூ.79.5 லட்சம் மதிப்புள்ள நிலங்களை மீட்டனர். இந்த நிலங்கள் திருக்கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது. இந்த நிலங் கள் துறை அனுமதிக்கு பின்னர் திருக் கோயில் செயல் அலுவலரால் குத்தசை பொது ஏலத்துக்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Similar News