கரூரில், 29 தொழிலாளர் சட்டங்களை 4- சட்ட தொகுப்புகளாக சுருக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

கரூரில், 29 தொழிலாளர் சட்டங்களை 4- சட்ட தொகுப்புகளாக சுருக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-05-20 14:06 GMT
கரூரில், 29 தொழிலாளர் சட்டங்களை 4- சட்ட தொகுப்புகளாக சுருக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு, அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வாரி சம்மேளங்கள் இணைந்து நடத்திய, அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மறியல் போராட்டம் இன்று மாலை திமுக தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அப்பாசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். விவசாயம் மற்றும் விவசாயிகளை ஒழிக்கும் வேளாண் சட்டங்களை கண்டித்தும், பொது துறைகளை நாசமாக்கும் தேசிய பணமாக்கல் திட்டத்தை கண்டித்தும், இதே வரிசையில் தொழிலாளர்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் வகையில் மத்திய சட்டங்கள் 29ஐ- 4 சட்ட தொகுப்புகளாக சுருக்கி அமலாக்கும் திட்டத்தை நிறைவேற்றும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Similar News