பைபாஸ் சாலையில் லாரி மோதி 3 வாலிபர்கள் பலி. லாரி பறிமுதல். ஓட்டுநர் கைது.

ஆரணி, செப் 22. ஆரணி பைபாஸ் ஆற்றுப்பாலம் அருகில் சனிக்கிழமை நள்ளிரவில் லாரி மோதி 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இது குறித்து ஆரணி கிராமிய போலீஸார் விசாரணை செய்து விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரையும் கைது செய்தனர்.

Update: 2024-09-22 15:09 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் சரண்ராஜ்(22), ராதாகிருஷ்ணன் மகன் ராஜேஷ்(22), ஆகிய இருவரும் நண்பர்களாவர். மேலும் இவர்களது நண்பர் முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் மணிகண்டன்(22) என மூன்று பேரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்துள்ளனர் ஆரணியில் உள்ள பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மூன்று பேரும் ஆரணியில் நேரத்தை கழித்து விட்டு இரவு 11 மணிக்கு மேல் வீட்டிற்கு சென்றுள்ளனர் இதில் சரண்ராஜ், ராஜேஷ் இருவரும் முள்ளிப்பட்டியில் உள்ள மணி என்பவரை வீட்டில் விடுவதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது ஆரணி பைபாஸ் சாலையில் உள்ள ஆற்றுப்பாலம் அருகில் லாரி, 3 பேர் வந்த இரு சக்கர வாகனம் மீது மோதி 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் மோதிய லாரி நிற்காமல் வேகமாக எடுத்துச்சென்றுள்ளார். நீண்ட நேரமாக யாருக்கும் தெரியாததால் அவ்வழியே வாகனத்தில் சென்றவர்கள் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆரணி கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் இறந்து கிடந்த மூன்று வாலிபர்களின் சடலங்களையும் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று வாலிபர்கள் உயிரிழப்புக்கு காரணமான வாகனம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி 10 மணி நேரத்தில் சிசிடிவி காட்சி அடிப்படையில் விபத்து ஏற்படுத்திய லாரியை கண்டுபிடித்தனர். விசாரணையில் செங்கத்திலிருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற கனரக வாகனமான லாரி மோதிவிட்டு நிற்காமல் ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியில் உள்ள ஒரு குடோனில் மறைவிடத்தில் நிறுத்தியிருந்தனர். போலீசார் சிசிடிவி காட்சி அடிப்படையில் லாரியை கண்டுபிடித்தனர் மேலும் லாரியை ஓட்டி வந்த செங்கம் அடுத்த அரசங்கன்னி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்ற ஓட்டுநரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்து ஆரணிக்கு கொண்டு வந்தனர்.

Similar News