தாராபுரம் அருகே சூதாடிய 3 பேர் கைது
தாராபுரம் அருகே சூதாடிய மூன்று பேரை தாராபுரம் காவல்துறையினர் கைது செய்தனர்;
தாராபுரம் அருகே உள்ள பொள்ளாச்சி சாலையில் செட்டி பாளையம் கிராமத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக தாராபுரம் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சீட்டாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை சுற்றிவளைத்தனர். விசார ணையில் அவர்கள் பொன்னாபுரம் மற்றும் சின்னக்காம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (வயது 54), முனியப்பன் (51), ராமசாமி (52) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்ததோடு, ரூ.2 ஆயிரத்து 200-ஐயும் பறிமுதல் செய்தனர்.