விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலக வளாகத்தில் அனுமதி இன்றி கிராவல் மண் அள்ளிய 3 டிராக்டர்கள்,மண் அள்ளும் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலக வளாகத்தில் அனுமதி இன்றி கிராவல் மண் அள்ளிய 3 டிராக்டர்கள்,மண் அள்ளும் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்த சூலகக்ரை காவல்துறையினர் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலக வளாகத்தில் அனுமதி இன்றி கிராவல் மண் அள்ளிய 3 டிராக்டர்கள்,மண் அள்ளும் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்த சூலகக்ரை காவல்துறையினர் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள BSNL அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தில் மணல் அள்ளுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் சுகுமார், கூரைக்குண்டு கிராம நிர்வாக அலுவலர், ரித்தீஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்ற போது சிலர் அங்கு கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து அவர்கள் சூலக்கரை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து போலீசார் அங்கு சென்றனர். போலீசாரைக் கண்டவுடன் மண் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். போலீசார் அங்கிருந்த 3 டிராக்டர்கள் மற்றும் மண் அள்ளும் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து, விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் இராஜகுமார் அளித்த புகாரின் பேரில் பெரிய மருளுத்தூரைச் சேர்ந்த, கம்பத்து ராஜா (24), அழகாபுரியைச் சேர்ந்த சுந்தர மூர்த்தி மற்றும் கருப்பசாமி(35) ஆகியோர் மீது சூலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்