சட்டவிரோதமாக மணல் திருடிய 3 பேரை போலீசார் கைது
கொசஸ்தலை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்;
திருவள்ளூர் திருவள்ளூர் அடுத்த மொண்ணவேடு கொசஸ்தலை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் திருவள்ளூர் மாவட்டம் மொண்ணவேடு கொசஸ்தலை ஆற்றல் சட்டவிரோதமாக ஆட்டோ மூலமாக ஆற்று மணல் திருடப்படுவதாக இன்று மாலை வெங்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது அதன்படி அங்கே சென்ற வெங்கல் போலீசார் ஆற்று மணல் திருடிய ஒதிக்காடு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சுமன் மொன்னவேடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய வருண் குமார் ,சரண்ராஜ் மூவரை வெங்கல் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 10 மூட்டைகளில் ஆட்டோவில் பதுக்கி வைத்திருந்த ஆற்று மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர் பின்னர் மூவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர் அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திருவள்ளூர் கிளைச் சிறையில் வைக்கமாறு நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்,