பட்டாகத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்த 3 இளைஞர்கள் கைது

திண்டுக்கல்லில் வாலிபரின் கழுத்தில் பட்டாகத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து செல்போன், பணம் பறித்த 3 இளைஞர்கள் கைது;

Update: 2025-05-22 03:47 GMT
திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டியன்(25) என்பவர் திண்டுக்கல் பழநிரோடு முத்தழகுபட்டி பிரிவு அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த முருகபவனத்தை சேர்ந்த விஜய்வெள்ளைசாமி(28), ஜஸ்டின்செல்வராஜ்(23), கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த முகேஷ்குமார் (எ) ரெட்(25), ஆகிய 3 பேர் பாண்டியன் கழுத்தில் பட்டாகத்தியை வைத்து கத்தியால் கழுத்தைஜன்னல் அறுத்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்து சட்டை பையில் வைத்திருந்த செல்போன், ரூ.1,200 பணம் ஆகியவற்றை பறித்து சென்றதாக பாண்டியன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக் கல் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News