கரூரில்,அதிகாலையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.3- பேர் படுகாயம்.
கரூரில்,அதிகாலையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.3- பேர் படுகாயம்.;
கரூரில்,அதிகாலையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.3- பேர் படுகாயம். ஈரோடு மாவட்டம் , , ஒரிசேரிபுதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் வயது 40. இவர் அரசு பேருந்து ஓட்டுனர். இவர் மே 29ஆம் தேதி கோவை -கரூர் சாலையில் அதிகாலை 4:10 மணி அளவில் , அரசு பேருந்தை ஓட்டி வந்தார். அவரது பேருந்துகரூர் பேருந்து நிலையம் அருகே வந்தபோது எதிர்திசையில் , கரூர் தாந்தோணி மலை, காமராஜ் நகரை சேர்ந்த கணேசன் வயது 58 என்பவர் ஓட்டி வந்த மற்றொரு அரசு பேருந்து , சரவணன் ஓட்டி வந்த பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த கோவையைச் சேர்ந்த சகுந்தலா வயது 67 , ஈரோட்டை சேர்ந்த முத்தம்மாள் வயது 72, நாமக்கல்லை சேர்ந்த ருக்மணி வயது 64 ஆகிய மூன்று மூதாட்டிகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சரவணன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் அரசு பேருந்தை வேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கணேசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் நகர காவல் துறையினர்.