ஒரு லட்சம் பணம் 3 பவுன் நகையுடன் இளம்பெண் மாயம்
மதுரை பேரையூர் அருகே ஒரு லட்சம் பணம் 3 பவுன் நகையுடன் இளம்பெண் வீட்டில் இருந்து மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.;
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள கமலாபட்டியை வடக்கு தெருவை சேர்ந்த சந்திரன் மகள் சோனியா( 20) என்பவர் நேற்று (ஜூன் .16) அதிகாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து ஒரு லட்சம் பணம் மற்றும் 3 சவரன் நகையை எடுத்துக் கொண்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களை தேடி கிடைக்கவில்லை என்பதால் நேற்று மதியம் இவரது தந்தை சேடப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் பணம் மற்றும் நகையுடன் காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.