கடையநல்லூர் சக்கரம் கழண்டு ஓடியது பஸ்ஸில் பயணம் செய்த 3 பள்ளி மாணவர்கள் படுகாயம்
சக்கரம் கழண்டு ஓடியது பஸ்ஸில் பயணம் செய்த 3 பள்ளி மாணவர்கள் படுகாயம்;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் மதுரையில் இருந்து குற்றாலம் நோக்கி சென்ற அரசு பேருந்து சென்றது. பஸ்ஸை வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த டிரைவர் சங்கரன் 55 என்பவர் ஓட்டி வந்துள்ளார் அப்பொழுது மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலை இடைகால் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்த பொழுது திடீரென பஸ்ஸினுடைய ஆக்சில் முறிவு ஏற்பட்டு பேருந்தின் இரண்டு பின் சக்கரங்களும் கழண்டு ஓடியது இதனால் பயங்கர சத்தத்துடன் பஸ்ஸினுடைய பின்பகுதி நெடுஞ்சாலையில் தரை தட்டியது அப்பொழுது பஸ்ஸில் உள்ளே இருந்த மூன்று மாணவர்கள் உட்பட 40 பயணிகளும் பஸ்ஸில் உள்ளே தூக்கி வீசப்பட்டனர் பஸ் பேருந்து பின்பகுதியில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் மூன்று பேரும் படுகாயத்துடன் உயிர்தத்தினர் உடனடியாக அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் அதனைத் தொடர்ந்து பேருந்துக்குப் பின்னால் மற்ற பேருந்துகள் வராததால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது, இதுகுறித்து ஆய்க்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் அரசு பஸ்ஸின் சக்கரம் கழண்டு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது