விபூதி நீர் பரிகாரம் பெயரில் தங்கம் கொள்ளை – 3 பேர் கைது !

மந்திரம் என்ற பெயரில் நூதன கொள்ளை – நாக்பூரில் கொள்ளையர்கள் சினிமா பாணியில் கைது.;

Update: 2025-10-02 03:49 GMT
கோவையில் தங்க நகை பட்டறை ஊழியரை ஏமாற்றி, விபூதி நீர் தெளித்து பரிகாரம் செய்வோம் என்ற பெயரில் 80 கிராம் தங்கத்தை பறித்துச் சென்ற ஈரானி கொள்ளையர்கள் 3 பேரை, போலீசார் சினிமா பாணியில் கைது செய்தனர். வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, சி.சி.டி.வி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்ட போலீசார், கொள்ளையர்கள் மகாராஷ்டிரா நோக்கி தப்பியதை கண்டறிந்து, நாக்பூரில் வலைவீசி யாஷிம் அலி, குர்பானி, பாரித் ஆகியோரை மடக்கிப்பிடித்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சலீம் அலியை தேடும் பணி நடைபெற்று வருகிறது. தேசிய அளவில் பல ஆண்டுகளாக போலீசாரை தவிர்த்து வந்த இவர்களை கைது செய்த தனிப்படையினரை, கோவை மாநகர காவல் ஆணையர் சரவணன் சுந்தர் பாராட்டி உள்ளார்.

Similar News