நாமக்கல்லில் லாரி மீது மினி சரக்கு வாகனம் மோதியதில் 3 பேர் பலி.
3 பேர் படுகாயம் அடைந்தனர் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
நாமக்கல் - திருச்சி சாலையில் ரமேஷ் தியேட்டர் அருகே ரயில்வே மேம்பாலம் வழியாக லாரி ஒன்று சமையல் எண்ணெய் லோடு ஏற்றி கொண்டு திருச்சிக்கு கொண்டிருந்தது. அப்போது எதிர்புறத்தில் சாக்கு பை ஏற்றி வந்த மகேந்திரா பிக் ஆப் லோடு வாகனம் ஒன்று லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் மகேந்திரா பிக் ஆப் லோடு வாகனம் பின்னால் வந்த இருச்சக்கர வாகனத்தின் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் இருச்சக்கர வாகனத்தில் வந்த நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்த கார்த்திக் ( வயது 24), சத்யாநகரை சேர்ந்த சேனாதிபதி (25) மற்றும் மகேந்திரா பிக் ஆப் லோடு வாகனத்தை ஓட்டி வந்த கர்நாடகா மேலூர் கோளாரை சேர்ந்த சையதுவாசின் ( வயது 30) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த ஆகாஷ் ( 24), லாரி ஓட்டுநர் ராஜேஷ் உட்பட 3 பேரை மீட்டு மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சாலை விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த நாமக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கியவர்களின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சாலை விபத்தால் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் நகரில் சாலை விபத்தில் மூவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.