நாகையில் நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு சார்பில் குடியரசு தினவிழா
Nagai News;
நாகப்பட்டிணம் மாவட்டம் காடம்பாடியில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு. மற்றும் அகில இந்திய மனித உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக "நுகர்வோர் பாதுகாவலர்" டாக்டர் செ. பால் பர்ணாபாஸ் ஆணைக்கு இணங்க நேற்று 26/01/2026. 77 வது ஆண்டு குடியரசு தினம் முன்னிட்டு நாகை மாவட்டத்தின் பொறுப்பாளரும், மாநில பொதுக் குழு உறுப்பினருமான திருமதி பி.வெண்ணிலா நாகை நகர் மன்ற உறுப்பினர், எஸ்.கௌதமன் ஆகியோர் தலைமையில் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் இணைந்து தேசிய கொடியேற்றும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சுந்தர், கண்ணன், சுப்பிரமணியன் மரியா மார்ட்டின், பிரகாஷ் ஜி.சக்கரவர்த்தி, ராணி, முத்துப்பாண்டி, பத்திரிக்கையாளர்கள் ராதா, மகேந்திரன், கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.