தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
தஞ்சாவூர் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.;
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது பெற்றோர்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.