சிதம்பரத்தில் நடைபெறும் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவிற்கு 300க்கும் மேற்பட்ட வாகனங்களில் பொதுமக்கள் அழைத்துச் செல்வது என தீர்மானம் நிறைவேற்றம்
சிதம்பரத்தில் நடைபெறும் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவிற்கு 300க்கும் மேற்பட்ட வாகனங்களில் பொதுமக்கள் அழைத்துச் செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
அரியலூர், ஏப்.21- மே 6-ஆம் தேதி சிதம்பரத்தில்.நடைபெறவுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டத்தை முன்னிட்டு அரியலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் ஜெயங்கொண்டம் ஒன்றிய மற்றும் உடையார்பாளையம் பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் கூட்ட அரங்கில் அரியலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கதிர்வளவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மே 6 சிதம்பரத்தில் நடைபெற உள்ள தேர்தல் அங்கீகாரம் வெற்றி விழா பொதுக்கூட்டத்தை சிறப்பிக்க அனைத்து பகுதிகளிலும் இருந்து ஆட்களை திரட்டி கூட்டத்தில் கொண்டு வர வேண்டும், கிராமம் தோறும் அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும், வெற்றி விழா பொதுக்கூட்டத்திற்கு 300 -க்கும் மேற்பட்ட பேருந்துகளிலும், 100-க்கு மேற்பட்ட வாகனங்களிடம் செல்ல வேண்டுமென திட்டமிடப்பட்டது.கட்சி அங்கீகாரம் மற்றும் தேர்தல் சின்னம் பெறுவதற்கு காரணமாக இருந்த சிதம்பரத்தில் வெற்றி விழா கொண்டாட அனைத்து தரப்பு மக்களையும் அழைத்து சென்று தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும் என தீர்மாணிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு தொகுதி செயலாளர் இலக்கிய தாசன் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை இணை செயலாளர்சிபி ராஜா ஆகியோர் முன்னிலை வைத்தனர். மேலும் நகர் மன்ற தலைவர் சுமதி சிவகுமார், மாவட்ட அமைப்பாளர் சின்ன ராஜா, பரமசிவம், சரவணன், குமரவேல், சக்திவேல், மாரியப்பன், ஒன்றிய துணை செயலாளர் சத்யானந்தம், சங்கர், தினேஷ், பாலா, மணி, ஜெயங்கொண்டம் நகர பொறுப்பாளர்கள் தங்க அருண், ராஜா, மணிமாறன், மாணிக்கம், மணி, தவசீலன், ஒன்றிய பொறுப்பாளர்கள் கவுண்டமணி, சகாதேவன், ஆனந்தகுமார், பாலமுருகன், ராமநாதன், குமார், மகளிர் அணி திலகவதி, வசந்தா, அனிதா, தேன்மொழி, மற்றும் திருமாவளவன், பிரபாகரன், ஐயப்பன், சூர்யா, குரு உட்பட மாவட்ட, மாநில, ஒன்றிய, முகம் பொறுப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்