பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ நெகிழி பொருட்கள் பறிமுதல்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ நெகிழி பொருட்கள் பறிமுதல்;
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 300 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பதுக்கிய கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.... சிவகாசி மாநகராட்சி பகுதியில் வணிக நிறுவனங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தி வருவதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து ஆணையாளர் சரவணன் உத்தரவில் சுகாதார அலுவலர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் அடங்கிய குழு சிவகாசி சிவன் மாட வீதியில் உள்ள 42 கடைகளில் சோதனை நடத்தினர். இதில் 5 கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்படுத்திய தெரியவர தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மற்றோடு கடையில் நடத்திய சோதனையின் போது அங்கு மொத்தமாக 300 கிலோ நெகிழி பைகள் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நெகிழி பைகளை பறிமுதல் செய்து கடையை பூட்டி சீல் வைத்தனர்.