முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுதிறனாளிகள் உள்ளிட்ட 3000 பேருக்கு நலத்திட்ட உதவிக் வழங்கப்பட்டன;

Update: 2025-03-18 06:58 GMT
  • whatsapp icon
முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுதிறனாளிகள் உள்ளிட்ட 3000 பேருக்கு நலத்திட்ட உதவிக் வழங்கப்பட்டன. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் நாலூர், வன்னிப்பாக்கம், சிறுவாக்கம், தடப்பெரும்பாக்கம், மெதூர், திருப்பாலைவணம், பழவேற்காடு ஆகிய ஊராட்சிகளில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ரமேஷ்ராஜ் தலைமையில் நடைபெற்றது இதில் அனைத்து ஊராட்சிகளிலும் திமுக கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது பின்னர் வெயிலில் இருந்து பொதுமக்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு இளநீர், தர்பூசணி, மோர்,மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது பின்னர் மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கி 3000பேருங்கு வேட்டி சேலை அரிசி காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் பகலவன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பாஸ்கர்சுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே மூர்த்தி, ஒன்றிய செயலாளர் முரளிதரன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News