வாக்காளர் பட்டியல்பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது

பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்;

Update: 2025-12-20 13:41 GMT
குமாரபாளையத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடியில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. குமாரபாளையத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடியில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. குமாரபாளையத்தில் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு வாக்காளர் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தனவா? என்பதை கேட்டு, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் கலந்து கொண்டு மக்களுக்கு படிவங்களை எவ்வாறு பூர்த்தி செய்வது என்றும், முடியாதவர்களுக்கு பூர்த்தி செய்து கொடுத்தும் பல நாட்களாக உதவி வந்தனர். அனைத்து பணிகளும் முடிந்து தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதையடுத்து, நேற்று, குமாரபாளையம் பகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடியில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பொதுமக்கள் பெருமளவில் வந்து தங்கள் ஓட்டுக்கள் உள்ளனவா? என்று சரி பார்த்துக் கொண்டனர். பொதுமக்களுக்கு உதவிடும் பணியில் விட்டலபுரி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மக்கள் நீதி மய்யம் மகளிரணி மாவட்ட அமைப்பாளர் சித்ரா, காமராஜ், மல்லிகா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Similar News