காங்கேயத்தில் பொதுக் கழிவறை குழாய்கள் உடைந்து கழிவுகள் விவசாய தோட்டத்தில் பாய்வதாக குற்றசாட்டு - புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகம் என குற்றசாட்டு.
காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட கனிமேடு, அண்ணா நகரில் பொதுக்கழிப்பிடம் செயல்பட்டு வருகின்றது. இந்த பொதுக்கழிப்பிடத்தில் கழிவு நீர் குழாய் பழுது ஏற்பட்டு விவசாயி பூமிக்குள் நீருடன் கழிவுகள்பாய்வதாக நிலத்தின் உரிமையாளர் நகராட்சி நிர்வாகத்திடம் கடந்த 15 நாட்களுக்கு முன் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை;
காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 13ல் களிமேடு, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் அருந்ததி மக்கள் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் பயன்பாட்டிற்காக காங்கேயம் நகராட்சி சார்பில் பொதுக் கழிப்பிடம் ஒன்று கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இந்த கழிப்பிடத்தின் அருகே ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான விவசாயம் தோட்டம் உள்ளது. இந்த பொது கழிப்பிடத்தின் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர்கள் அருகே உள்ள விவசாயி பூமிக்குள் வந்து கழிவுகளுடன் தேங்கி நிற்கின்றது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதில் வசிக்கும் மக்களுக்கு தொற்றுநோய்களை உருவாக்கும்.மேலும் விவசாய பூமியில் விவசாயம் செய்ய இயலவில்லை எனவும் கால்நடைகளுக்கு தீவனம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று நிலத்தின் உரிமையாளர் ஸ்ரீதர் நகராட்சி நிர்வாகத்திடம் கடந்த 15 நாட்களுக்கு முன் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த புகார் குறித்து நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கின்றார். மேலும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கழிவுநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டுள்ளதை சரி செய்யும் படி நகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டுமெனவும் இந்த புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் இதுகுறித்து ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தனது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவிக்கின்றார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காங்கேயம் நகராட்சியில் 150 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியில் இருந்ததாகவும் தற்போது குப்பைகள் தரம் பிரித்து வாங்குவதற்கு தனியார் நிறுவனத்திடம் காண்ட்ராக்ட் மூலம் விடப்பட்டுள்ளதாகவும் காங்கேயம் நகராட்சி முழுவதும் குப்பைகளை வாங்க சுமார் 40பேர் மட்டுமே பணியில் உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் ஆங்காங்கே குப்பைகளை போட்டு தீ வைத்து சுகாதார சீர்கேட்டை நகராட்சி நிர்வாகமே ஏற்படுத்தி வருகின்றது என சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்