தலைமை அஞ்சல் நிலையம் அமைக்க தகுந்த இடம் ஆய்வு செய்ய பொதுமக்கள் கோரிக்கை
குமாரபாளையம் நகரில் தலைமை அஞ்சல் நிலையம் அமைக்க தகுந்த இடம் ஆய்வு செய்ய பொதுமக்கள் கோரிக்கை;
குமாரபாளையம் நகரில் தலைமை அஞ்சல் நிலையம் அமைக்க தகுந்த இடம் ஆய்வு செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நாமக்கல், கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளருக்கு விண்ணப்பம் அனுப்பி உள்ளனர். அதில் குறிப்பிட்டுள்ளதாவது: குமாரபாளையம் தலைமை அஞ்சல் நிலையம் தற்போது, பள்ளிபாளையம் சாலை காந்தி நகர் பகுதியில் வெகு தொலைவில் செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அங்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். இதனை இடமாற்றம் செய்து, குமாரபாளையம் நகர எல்லைக்குள் அமைக்க வேண்டி, பல வருடமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் பலனாக, அஞ்சலக அதிகாரிகள், தலைமை அஞ்சல் நிலையம் அமைக்க, நகராட்சி அலுவலக அருகே மாடியில் தேர்வு செய்யபட்டுள்ளதாக அறிந்தோம், இந்த இடத்தில் இரு பக்கமும் ஜன்னல் கூட இல்லாததால், காற்றோட்டம் இருக்காது. மேலும் மாடியில் அஞ்சல் அலுவலகம் என்றால், மாற்றுத்திறனாளிகள் வயதானோர் மேலே ஏறி வர சிரமப்படுவார்கள். அனைத்து வசதிகளுடன் இரண்டு இடங்கள் நகரில் உள்ளது. அந்த இடத்தில் தலைமை அஞ்சல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவில் சுமார் 70க்கும் மேற்பட்டவர்கள் கையொப்பம் போட்டு உள்ளனர்.