நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் நேற்று (ஆகஸ்ட் 25) தமுமுகவின் 31ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி மேலும் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் கலந்து கொண்டு கொடி ஏற்றி ஆதரவற்றவர்களுக்கு உணவுகளை பரிமாறினார். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.