திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதி 313 ஐ நிறைவேற்றிடக்கோரி நாமக்கல்லில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் மாவட்ட செயலாளர் பிரேமா தலைமையில் ஒரு நாள் விடுப்பு எடுத்து 1000 த்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள்.;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2026-01-06 12:52 GMT
மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக உடனடியாக அறிவித்திட வேண்டும், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் பணி ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு பணிக்கொடையாக 10 லட்சமும், உதவியாளர்களுக்கு 5 லட்சமும் வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு குடும்ப ஓய்வூதியமாக ஒன்பதாயிரம் வழங்க வேண்டும் மேலும் தேர்தல் வாக்குறுதியான 313 ஐ நிறைவேற்றிடக்கோரி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் முழக்கங்களை எழுப்பியவாறு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் அவர்களை நாமக்கல் ஏ.எஸ்.பி ஆகாஷ்ஜோஷி தலைமையில் போலீசார் கைது செய்து நாமக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.